Pages

Monday, February 25, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

பெரியார்: 
*  இயற்பெயர்: இராமசாமி்.

*  பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
*  பிறந்த ஊர்: ஈரோடு.

*  தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.

*  போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.

*  தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.

*  பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973

*  சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.

*  மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.

*  பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.

*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.

*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தா - 13,12,000 கி.மீ

*  பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.



புறநானூறு:

*  புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

*  தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.

*  இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.

*  அதியமானின் நண்பர் - ஔவையார்.

*  சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.

*  நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.

சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.

*  ஔவை என்பதன் பொருள் - தாய்.

பாடல் வரிகள்:

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்

**  பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாக இருப்பாய்.

*  திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.

*  காலம்: 26.02.1947 - 13.05.2000

*  பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.

*  பாடல்வரிகள் சில: "கடலின் நான் ஒரு முத்து"

எத்தனை உயரம் இமயமலை- அதில்

இன்னொரு சிகரம் உனதுதலை"

பூமிப்பந்து என்ன விலை? -உன்

புகழைத் தந்து வாங்கும் விலை!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்:
*  பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.

*  பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை.

கல்வி:

*  தொடக்கக்கல்வி - கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் - பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார்.

*  முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.

*  முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.

*  நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.

*  சமபந்தி முறையை ஆதரித்தார்.

*  தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.

*  தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)

*  தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.

*  சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.

*  1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.

*  தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.

*  முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.

*  17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.

*  உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.

*  உம்பர் என்றால் மேலே என்று பொருள்.

*  உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.

*  கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.

**  இவரின் கூற்றுகள்:

*  சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.

*  வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.

*  மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.

*  மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)

**  இலக்கணம்: சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை)

எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.

*  அகச்சுட்டு - அவன், இவன்

*  புறச்சுட்டு - அப்பையன்

*  சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.

*  தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ

எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?

*  வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்?  யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?

*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ

எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.

*  தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.

பொருள்:

*  ஈரம்- அன்பு, அனைஇ-கலந்து, படிநு-வஞ்சம், அகன்-உள்ளம், அமர்-விருப்பம், செம்பொருள்-சிறந்த பொருள், துவ்வாமை-வறுமை, அல்லவை-பாவம், நன்றி-நன்மை, சிறுமை-துன்பம், ஈன்றல்-தருதல், வனகொல்-கடுஞ்சொல், கவர்தல்-நுகர்தல்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:

*  செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

*  பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.

*  காலம்: 13.04.1930 - 08.10.1959

*  மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.

*  தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.

**  சில பாடல் வரிகள்:

செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்

திறமைதான் நமது செல்வம்

"பயிரை வளர்த்தால் பலனாகும் - அது

உயிரைக் காக்கும் உணவாகும்"

"காயும் ஒரு நாள் கனியாகும் -நம்

கனவும் ஒரு நாள் நனவாகும்"

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.