Pages

Wednesday, February 13, 2013

மாணவரின் பார்வை பாதிப்பு: தனியார் பள்ளி முற்றுகை - நாளிதழ் செய்தி

மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால்,  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சவுந்திரபாண்டியன் மகன் பிரபாகரன், 6. இவர், சித்தானங்கூர் தனியார் பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 8ம் தேதி மாலை, சிறுநீர் கழிக்க பாத்ரூம் சென்றார்.

மறுநாள் நடக்க இருந்த செய்முறைத் தேர்விற்காக, பிளஸ் 2 மாணவர்கள் சிலர், ஆய்வக உபகரணங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதிலிருந்த ஆசிட் துளி, பிரபாகரனின் கண்களில் பட்டது. கண் எரிச்சல் ஏற்பட்டு, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நேற்று காலை, 10:30 மணிக்கு, மாணவனின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவரின் மருத்துவச் செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக கூறியதை அடுத்து, காலை, 11:30 மணிக்கு கலைந்துச் சென்றனர்.

இதே பள்ளியில், 9ம் வகுப்பு படித்த, மாணவர் சாமுவேல், 14, கடந்த, 19ம் தேதி, பள்ளி விடுதியிலிருந்து காணாமல் போனார். இவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று காலை, 11:30 மணி முதல், 12:15 மணி வரை, சாமுவேலின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.