Pages

Monday, February 25, 2013

வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்)
அலுவலகத்தில்  பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஜூம் மாதம் 30-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நேரில் சென்று ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.அல்லது குடும்ப ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் நேரில் வர இயலாதவர்கள் அரசு பதிவு பெற்ற அலுவலர்களின் சான்றொப்பமிட்ட உயிர்ச் சான்றிதழை அரசு பதிவு பெற்ற மருத்துவர அலுவலரின் மருத்துவ சான்றுடன் ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்தின் நகல்களுடன் இணைத்து அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

பின்னர் கண்டிப்பாக நேரில் வந்து உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு உயிர்ச் சான்றிகழை நேரிலோ அஞ்சல் மூலமோ அனுப்பாதவர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகஸ்ச் 2013 முதல் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.