ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு, மது போதையில் வருவது, மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என, செயல்பட்ட, கணக்கு ஆசிரியர் பவுல் பாப்பையா, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றுபவர் கணக்கு ஆசிரியர் பவுல் பாப்பையா. போதையில் பள்ளிக்கு வருவது, முறையாக பாடங்கள் நடத்தாதது என, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதோடு, கணித தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்கவில்லை. இதனால் மறுதேர்வு நடத்தும் சூழல் ஏற்பட்டது.இது குறித்து பெற்றோர் பலமுறை, பள்ளி சேர்மன் கோபக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அவரும், சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கமிஷனரிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதனால் தைரியமடைந்த பவுல் பாப்பையா, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக மீண்டும் புகார் கிளம்பியது.
இம்மாதம் 12ம் தேதி, ஒரு மாணவியை, பள்ளி முழுவதும் துரத்தினார். பயந்து போன மாணவி, வீட்டுக்கு தப்பிச்சென்று பெற்றோரிடம் புகார் கூறினார். கோபமடைந்த பெற்றோர், 15 ம் தேதி பள்ளி முதல்வரை சந்திக்க வந்தனர். அப்போது பவுல் பாப்பையாவை தாக்கினர். இது குறித்து பள்ளி முதல்வர் முத்துக்குமாரசுவாமி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை கமிஷனரிடம், தகவல் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளி முதல்வருக்கு தகவல் வந்தது. ஒரு குழு அமைத்து விசாரணை அறிக்கை, சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலம் புஜ் பகுதி பள்ளிக்கு, பவுல் பாப்பையா இடமாற்றம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.