Pages

Tuesday, February 19, 2013

என்ன பாவம் செய்துவிட்டார்கள்...... நாளிதழ் செய்தி

பள்ளிக்கல்வித்துறையும், தொடக்கக்கல்வித்துறையும் ஒரே அரசின் கீழ் இயங்கும் இரு துறைகளாக இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்னெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையே உள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு உயர்நிலைப்பள்ளியில் அரசு செலவில் இண்டர்நெட் இணைப்பு கொடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூட இணைய இணைப்பிற்கான நிதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களை மேலாண்மை செய்யும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு போதிய அளவில் கணிப்பொறிகளோ, அச்சுப்பொறிகளோ வழங்கப்படவில்லை. இண்டர்நெட்டின் வாசம் கூட இன்னும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு காட்டப்படவிலை.

கட்டமைப்பு வசதிகள்தான் இல்லையென்றால் பணியாளல் எண்ணிக்கை மிகவும் மோசம். 40 ஆசிரியர்கள் பணிபுரியும் மேல்நிலைப்பள்ளிகளில் 4 அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் 350 ஆசிரியர்கள் பணிபுரியும் ஒரு ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 3 பேரைத் தவிர மீதியெல்லாம் காலிப் பணியிடங்களாக உள்ளன.

தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களோடு சேர்த்து உத்தரவுகளையும் தயார் செய்து கொண்டே அலுவலர்களை அணுக வேண்டிய நிலை நிலவுகிறது.
EMIS திட்டத்தின்படி ஆசிரியர் விவரங்கள், மாணவர் விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது தொடர்பாக உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பட்ட பாடும், படும் பாடும் காணச் சகிக்காதன.
கடந்த 2008 ஆம் ஆண்டில் முதன் முதலாக Teacher Profile கணினிமயமாக்கப்பட்டபோது, அப்பணியை SSA விடம் ஒப்படைத்தது அரசு. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் போதுமான நிதி இருந்தது. தேவையான அளவு கணிப்பொறிகள் இருந்தன. முதன்மைக்கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் தேவையான அளவு கணிப்பொறி பாட ஆசிரியர்கள் இருந்தனர். கணினியில் பதிவேற்றம் செய்ய அருமையான மென்பொருளும் எல்காட் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.

அதே பணியின் நீட்சியாக 2012ல் Teacher Profile update செய்ய தீர்மானிக்கப்பட்ட போது, அந்த வேலை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தலையில் விழுந்தது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் நிதியும் இல்லை, தேவையான கணிப்பொறிகளும் இல்லை. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் கணிப்பொறி பாட ஆசிரியர்களும் இல்லை. இதையெல்லாம் விட பெரிய கொடுமை, பதிவேற்றம் செய்ய உரிய மென்பொருள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதுதான். டேட்டாபேஸை (Database) ஐ காப்பி செய்து கொடுத்து அப்டேட்ட செய்யச் சொல்லி விட்டார்கள். எந்த ஆசிரியரின் பெயர் எங்கு இருக்கிறது என்ற தேடுவதிலும், புதிய ஆசிரியர்களுக்கு வரிசை எண் இடுவதிலும் ஏராளமான நேரம் செலவழிந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் இந்த வேலையை செய்தால் டேட்டா மெர்ஜிங் பிரச்சினை வரும் என்பதால் ஒரு கணினியில் அரும்பாடுபட்டு செய்து முடித்தனர்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் வேறு நிலை, அவர்கள் 2008 ல் எந்த இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்தார்களோ அதே இணையதளத்தில், தங்கள் பள்ளியில் உள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி எளிமையாக செய்து முடித்துவிட்டனர். ஏன் இந்த ஓரவஞ்சனை, தொடக்ககல்வித்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் என்ன பாவம் செய்துவிட்டார்கள்.

1 comment:

  1. thanks for ur comments all departments may be merge for promotions & other specilities

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.