ராமநாதபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில், காப்பாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால், மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெற்றோரை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் அரசு உதவியுடன் தங்கி படித்து வருகின்றனர். தற்போது, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். சமூக நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்பகத்தில், காப்பாளர், கணக்கர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்கள், நீண்ட நாட்களாக காலியாக உள்ளது.
இதனால் மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மாணவிகளை கண்காணிப்பதிலும், காப்பகம் தொடர்பான கடிதப்போக்குவரத்து, ஆவணங்கள், கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் எதிர்கால நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்ப, சமூகநலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.