தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கான இரண்டாம் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி 20-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதல் தவணை போலியோ முகாம் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
2 லட்சம் ஊழியர்கள்: தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாகார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.