Pages

Friday, February 22, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணி அரியலூரில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை முற்றிலும் கைவிட வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிட வேண்டும். நடப்பில் உள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நம்பிராஜன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தங்கமணி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் நல்லப்பன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாமிதுரை, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுசெயலாளர் இளம்பரிதி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசிய ஆர்ப்பாட்டத்தை, ஐபெட்டோ அமைப்பின் அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை முடித்து வைத்து பேசினார். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.