தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வாகியுள்ள தட்டச்சர்களுக்கு, மூன்று மாதங்களாக பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதால், பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
தமிழக அரசின் பல துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் குரூப்-4 தேர்வு நடத்தியது. ஸ்டெனோகிராப்பர்-1074, இளநிலை உதவியாளர்-5500, தட்டச்சர்-3674 மற்றும் டிராப்ட்மேன், சர்வேயர் ஆகிய 10 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வின் முடிவு கடந்த ஆண்டு அக்., 8ல் வெளியானது.
தேர்வானவர்களுக்கு நவம்பரில் கவுன்சிலிங் நடந்தது. டிசம்பரில் அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, 20 நாளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்கள் பணியிலும் சேர்ந்து விட்டனர். ஆனால், தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி, 3 மாதங்களாகியும், இன்னும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
நேர்முகத் தேர்வின் போது, அவரவர் சார்ந்த மாவட்டங்களில் உள்ள பணியிடங்களில் நியமிக்க உள்ளதாகவும், விரைவில் பணி நியமன உத்தரவு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்படும், என்றும் கூறி, அனுப்பியுள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் தட்டச்சர் பிரிவில், தேர்வாகியுள்ள 3674 பேரும், தினமும் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களுக்கு, பணி நியமன உத்தரவிற்காக அலைகின்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.