எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின்
சென்னை மண்டல துணை இயக்குனர் ஆர்.கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ளது. இந்த தேர்வை முதல் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிக்கூடத்திலேயே செய்முறைத்தேர்வில் பங்கேற்க வேண்டும். செய்முறைத்தேர்வு 20–ந் தேதி தொடங்கி 28–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் (சனிக்கிழமை உள்பட) காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபெறும்.செய்முறைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரியிடம் 18 முதல் 20–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான ரெக்கார்டு நோட்டை தவறாறு தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். செய்முறைத்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி தெரிந்துகொள்ளலாம். செய்முறைத்தேர்வு குறித்து தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது.
போட்டோவுடன் கூடிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் பின்னர் தனியே வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே தியரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு கீதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.