Pages

Saturday, February 23, 2013

மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைந்ததால் 117 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன

ஆசிரியர் பயிற்சி முடிந்து மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது... அதனால் பிளஸ்-2 படித்து
முடித்தவுடன் பெரும்பாலான மாணவிகள் உயர் கல்வியை தொடராமல் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து படிப்பார்கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பை, மாநில அளவில் மாற்றியதால் ஏற்கனவே படித்து முடித்த 4 லட்சத்திற்கும் மேலான இடைநிலை ஆசிரியர்களின் நிலை கேள்விக் குறியாக உள்ளது.

இதனால் ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் காலியாக கிடந்தன. ஒரு சில பள்ளிகளில் ஒருவர் கூட சேரவில்லை.

இதன் காரணமாக தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 80 மற்றும் தனியார் ஆசிரியர் பள்ளிகள் என மொத்தம் 611 உள்ளன. இவற்றில் கடந்த 5 வருடத்தில் மட்டும் 117 பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதன் மூலம் 41,900 பேர் ஆண்டுக்கு படித்து முடித்து வெளியே செல்லலாம். ஆனால் கடந்த வருடம் 8,415 பேர் மட்டுமே பயிற்சியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இடங்களில் சேருவதற்கு மாணவர்கள் இல்லாமல் காலியாக கிடந்தன.

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ-மாணவிகள் சேராததற்கு மாநில சீனியாரிட்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்றவையே காரணங்களாக கூறப்படுகிறது.

அரசின் இந்த கொள்கையால் படித்து விட்டு பல லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் காத்திருப்பதாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.