கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு
நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் பெற்றவர்கள் தங்களது விவரங்களை
ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,607 உதவியாளர் நிலையிலான பணியிடங்களை நிரப்புவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் 09.12.2012 அன்று எழுத்துத் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சிப் பெற்ற தேர்வாளர்களுக்கு 28.12.2012 முதல் 02.01.2013 முடிய நேர்முகத் தேர்வு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நேர்முகத் தேர்வு, 28.12.2012ஆம் தேதி அன்று மட்டும் சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது. பின்னர், பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, 29.12.2012 முதல் நடைபெறயிருந்த நேர்முகத் தேர்வு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள், தேர்வாளர்களின் வசதிக் கருதி, ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 23.01.2013 முதல் 31.01.2013 வரை நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையித்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 29.12.2012 முதல் 02.01.2013 வரை நேர்முகத் தேர்வில் பங்கேற்கயிருந்த தேர்வாளர்களுக்கு தற்போது 23.01.2013 முதல் 31.01.2013 வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகர்களில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்புக் கடிதங்கள் அவரவர் தொடர்பு முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய சுய குறிப்பை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வாளர்கள் www.tncoopsrb.org என்கின்ற இணைய தளத்தில், உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத் தேர்வுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும், விவரங்கள் தேவைப்படின், 044-24801034 / 24801036 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இவ்வாறு மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.