Pages

Sunday, January 6, 2013

பள்ளி மாணவிகளுக்கு பிரத்யேக பேருந்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர், மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து, மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்,' என, கல்வியமைச்சர் தியாகராஜன் கூறினார்.
புதுச்சேரி அரசுப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி, கடந்த 1ம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்துவது குறித்து, மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுடன், கல்வியமைச்சர் தியாகராஜன், துறை செயலர் மற்றும் இயக்குனர், நேற்று கலந்துரையாடல் நடந்தினர்.

பின்னர் அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்த, சில நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளோம். மாணவ, மாணவியர், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படும். மீறி கொண்டு வருகின்றனரா என்பதை, பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும்.

அரசு சார்பில், இயக்கப்படும் மாணவர் சிறப்பு பேருந்துகளை, அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் இயக்கப்படும். இந்த பேருந்துகளில், வெளி நபர்கள் பயணிக்கின்றனரா என்பதும் கண்காணிக்கப்படும். மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, பெற்றோருக்குத் தெரியப்படுத்திய பிறகே நடத்த வேண்டும்.

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவியருக்கு, "ஓவர் கோட்" வழங்கப்படும். எட்டு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு உடல், மன நலத்திற்கான கவுன்சிலிங் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.