Pages

Thursday, January 24, 2013

மனோன்மணியம் பல்கலையின் பி.ஏ., தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றமா?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது பி.ஏ., தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்திலிருந்து, ஆப்ஷனல் பேப்பர்களான பெண்ணியம், தலித்தியம் மற்றும் பெரியார் தியரிகள் ஆகியவற்றை நீக்குவது பற்றி திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு, சமூக ஆர்வலர்கள் மத்தியில், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்படும் மேற்கூறிய அம்சங்களுக்குப் பதிலாக, மொழிப்பெயர்ப்பு, சுற்றுலா, கணிப்பொறி அறிவியல் மற்றும் பண்டைய இலக்கியம் ஆகிய விருப்ப பேப்பர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"நீக்கப்படவுள்ள ஆப்ஷனல் பேப்பர்கள், கடந்த 2005ம் ஆண்டு சேர்க்கப்பட்டன. சமூகத்தைப் பற்றி மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, பெரியார் தியரி, பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு செமஸ்டரில், ஒரு ஆப்ஷனல் பேப்பரை படிக்க வேண்டும். இந்த அம்சங்கள் முற்போக்கானவையும்கூட. ஆனால், இதை நீக்கும் முடிவானது துரதிருஷ்டவசமானது" என்று பல்கலையின் தமிழ் துறையில் பணிபுரிந்த ராமசாமி கூறுகிறார்.

ஆனால், "சில நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்காகவே, சில பழைய ஆப்ஷனல் பேப்பர்களை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது" என்று பல்கலை, தமிழ்த்துறையின் தலைவராக இருக்கும் அழகேசன் கூறுகிறார்.

ஜனவரி 7ம் தேதி கூடிய Board of studies உறுப்பினர்களால், மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டாலும், இதுதொடர்பான இறுதி முடிவை பல்கலை சிண்டிகேட்தான் மேற்கொள்ளும் என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.