Pages

Saturday, January 19, 2013

அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் பள்ளிகளில் ஆசிரியர் பணி

அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் சர்வதேசப் பள்ளிகளை நடத்தி வருகிறது அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன். இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, கன்னடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர் பணி நியமனம் நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகவும், கற்பித்தலில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், careers@azimpremjifoundation.org என்ற முகவரிக்கு சுயவிவரக் குறிப்புகளை மின்னஞ்சல் செய்ய வேண்டும். முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள, www.azimpremjifoundation.org என்ற இணைய தளத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.