Pages

Tuesday, January 29, 2013

4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' அடிக்கும் போராட்டத்தில் மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் பிப்.,2ல், நடக்கும் "மொட்டை' அடிக்கும் போராட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைப்
பாதிக்கும் அரசாணை எண்: 720ல் மாற்றம் செய்யவேண்டும்; 7வது ஊதிய குழுவின் முதுநிலை ஆசிரியர் சம்பள விகிதத்தில் திருத்தம் செய்யவேண்டும்; தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராமாவரம்தோட்டம் முன், பிப்.2ல், 4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' போட தீர்மானித்துள்ளனர்.
மதுரையில் இருந்து 250 பேர், "மொட்டை' போட உள்ளனர். இந்நிலையில், பிப்.,2ல், மதுரை உட்பட சில மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இறுதி திருப்புதல் தேர்வுகள் நடக்கின்றன.
ஆசிரியர்கள் "மொட்டை' போராட்டத்தால் தேர்வு பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, "மொட்டை' போராட்டத்தை பிப்.,3 (ஞாயிறு)ல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை, சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மதுரை தலைவர் சரவணமுருகன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.