நாமக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வட்டார
செயலாளர் கதிரேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாதேஸ், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில பொதுச்செயலாளர் முருக.செல்வராஜன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும் 3ம் தேதி தேர்நிலை அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், அரசாணைகளும் ஐயப்பாடுகளும், விளக்கங்களும், சவால்களை சந்திப்போம். என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20, 21ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறும் 48 மணி நேர அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து அதில் முழுமாயாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.