Pages

Friday, January 25, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற
அணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணபலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. 
எம்.எட்., கல்வித்தகுதியை தொலைத்தூரக் கல்வி வாயிலாக பெற இயலாத சூழ்நிலை உள்ளது எனவும், ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி., போன்ற கல்வித்தகுதிகள் தொலைத்தூரக் கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண்.1024 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாள்.09.12.1993ன் படி அனுமதிக்கப்பட்ட தகுதியான உயர்க்கல்வி எம்.எட்., என்பதற்கு பதிலாக, எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பி.எச்டி பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்விற்கான உயர்க்கல்வியாக கருதி ஊக்க ஊதியம் வழங்கலாம் என குறிப்பிட்டுள்ளதால் எம்.எட்., உயர்க்கல்விக்கு வழங்கப்படும் அதாவது 09.12.1993 நாள் முதல் எம்.பில்., / பி.எச்டி கல்வித் தகுதிக்கும் வழங்கப்படும்.

1 comment:

  1. 09.12.1993 முதல் வழங்கப்படும் என்ற தகவல் சரிதானா?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.