Pages

Friday, December 21, 2012

அரசு பள்ளிகள் புள்ளி விவரம்: தலைமை ஆசிரியர்கள் கைவிரிப்பு

அரசு பள்ளிகளின் புள்ளி விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் சேகரிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் முறைக்காக சேகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும், அரசு பள்ளி துவங்கியது முதல், பல்வேறு முயற்சிகளால் மேல்நிலைப்பள்ளி வரை தரம் உயர்கின்றன. இதுபோன்ற பள்ளிகளில் வெவ்வேறு கால கட்டங்களில் பல தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்த போதிலும், தங்களது பள்ளிகளை பற்றிய பழைய தகவல்களை தெரிந்து கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு கல்வித்துறை அலுவலகங்களில் உள்ளது.

அரசு கேட்கும் தகவலுக்காக, குறிப்பிட்ட அரசு பள்ளி புள்ளி விவரங்களை அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டால் தெரியாது என்ற பதிலே பலரிடம் கிடைக்கிறது. இதை தவிர்க்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பணியேற்றது முதல் ஓய்வு பெறும் வரை தங்களது அரசு பள்ளி பற்றிய முழு விவரங்களை சேகரித்து, பைல் போட்டு வைத்திருக்கவும், அதிகாரிகள் கேட்கும் போது, தெரியாது என, பதில் தரக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளனர்.

1 comment:

  1. good idea. proceed . ilango aruppukottai

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.