Pages

Tuesday, December 4, 2012

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 6-வது ஊதியக்குழுவால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய
அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய முறையைத் தொடர வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிகைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமத்திய மண்டல அளவிலான இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் செ. சந்திரமோகன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலர் க. பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் ச. மோசஸ், அகில இந்தியத் துணைத் தலைவர் தா. கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோ. சுகுமார் ஆகியோர் பேசினர்.
புதுக்கோட்டை மாவட்டச் செயலர் க. கருப்பையா வரவேற்றார். திருச்சி மாவட்டச் செயலர் ம. தாமஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.