Pages

Sunday, December 2, 2012

ரூ.81 லட்சம் சம்பளம் பெற போகும் மாணவர் யார்?

சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்று, கேம்பஸ் இன்டர்வியூ துவங்குகிறது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 81 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்த வேலையைப் பெறப் போகும் மாணவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.,யில், பி.டெக்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்., - எம்.எஸ்சி., - பி.எச்டி., உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்த, 1,263 பேர், வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். இவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் வழங்க, 266 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இவற்றில், ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ், டோஷிபா, வால்மார்ட், பஜாஜ் ஆட்டோ, எம்.ஆர்.எப்., உள்ளிட்ட, 95 நிறுவனங்கள், புதிதாக வேலை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளன. மற்ற நிறுவனங்கள், ஏற்கனவே பட்டியலில் உள்ளன. இன்று முதல், 22ம் தேதி வரை, முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமும், ஜன., 16ம் தேதி முதல், இரண்டாம் கட்ட முகாமும் நடக்கிறது.

மொத்த மாணவர்களில், 43 பேருக்கு, முன்கூட்டியே வேலைவாய்ப்பு வழங்க, நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள், மாணவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளன. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 81 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது.

இன்றைய வேலை வாய்ப்பு முகாமில், பாஸ்டன், ஐ.டி.சி., - கூகுள் இந்தியா, சோனி, ஷெல் டெக்னாலஜி, பேஸ்புக், மைக்ரோ சாப்ட், ஐ.பி.எம்., உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.