Pages

Wednesday, December 12, 2012

6,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி

ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்தன.
டி.இ.டி., தேர்வில், 9,000 (8718) இடைநிலை ஆசிரியர்கள், தேர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது.

காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வும் நடந்தது.

மொத்த ஆசிரியரில், 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், மீதமுள்ள 3,132 பேர், வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. வேறு மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளவர்கள் .......நிலை ......மாவட்ட மாறுதல் இல்லை என்றால் நம்பவா போகிறார்கள் .....வடிவேலுவின் கிட்னி இழப்பு ஜோக் தான் நினைவுக்கு வருகிறது ,,,,,ஹையோ ,,,,,ஹையோ

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.