Pages

Tuesday, November 27, 2012

இலவச கல்வி தரும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பிரசாரம்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி தரும் அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மதுரை நிர்வாகி அருண்குமார் தலைமையில் ஏராளமானோர் இந்த துண்டு பிரசுரங்களை மாவட்டத்தின் பல்வேறு
இடங்களில் விநியோகித்தனர். இதே போல் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 2 நாட்கள் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் இயக்கம் என்ற தலைப்பில் அருகாமையில் உள்ள இலவசக் கல்வி தரும் அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோரை வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச சீருடைகள், சத்து ணவு, பாடப்புத்தகங்கள் முதல் மாணவர்களுக்கான பல்வேறு சலுகைகள், ஆசிரியர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் என அரசின் அனைத்து திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மாநில இயக்க நிர்வாகி அப்துல் மஜீத் கூறுகையில், 2 நாட்களில் ஒரு லட்சம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்துள்ளோம். நேரடியாக வீடுகளுக்குச் சென்று வழங்கியதுடன், மாணவர்களிடமும் துண்டு பிரசுரங்களைக் கொடுத்தனுப்பினோம். முக்கிய அரசு அலுவலகங்கள், மக்கள் வசிக்கும் இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்தோம். வரும் ஆண்டுகளில் அவரவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள  இலவச கல்வி தரும் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த முயற்சி ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.