Pages

Tuesday, November 27, 2012

மாற்றுப்பணியால் பணிச்சுமை ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிப்பு

ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலை யில் தங்களுக்கு முதுகலை ஆசிரியர் மாற்றுப்பணி வழங்குவது மேலும் சுமையை அதிகரித்துள்ள தாக ஆசிரியர் பயிற்றுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி, தகவல்கள், மாணவர்கள், பள்ளிகள்
தொடர்பான புள்ளி விபரங்கள் சேகரித்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மேல்நிலைப்பள்ளிகளில் முது கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் இப்பள்ளிகளில் வகுப்பெடுக்கும் பணி கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் பணிச்சுமையில் தவித்து வருகிறோம். இந்நிலையில் இந்த மாற்றுப்பணிக்காக மாணவர்களுக்கு வகுப்பெடுக்க தயாராவது உள்ளிட்ட கூடுதல் பணிகளால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் அந்தந்த ஒன்றியத்திற்குள் பணி வழங்காமல், பல கிமீ தூரமுள்ள வெளியூர்களில் பணி வழங்குவதாலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் என்றனர்.
வட்டார வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சம்பத் கூறுகையில்,  பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பெடுக்க அதிகாரிகள் உத்தரவிடலாம். இந்த பயிற்றுநர்களுக்கு அவசியம் பணி வழங்கியே ஆக வேண்டுமெனில், ஒன்றியத்திற்குள்ளேயே இந்த மாற்றுப்பணியை வழங்கலாம். ஒன்றியம் விட்டு ஒன்றியம் இவர்களை அனுபினால் இவர்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.