நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில், மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி, மூன்று நாள்கள் நடந்தன. முதல் நாள் போட்டியை, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.
போட்டியில், நாமக்கல், சேலம், கரூர், நெய்வேலி, திருச்சி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பெண்களுக்கான கோகோ, எறிபந்து போட்டியும், ஆண்களுக்கான கோகோ, பேஸ்கட்பால், வாலிபால் போட்டியும் நடத்தப்பட்டன. பெண்களுக்கான கோகோ இறுதிப் போட்டியில், கோவை சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளியும், நாமக்கல் வசந்தபுரம் ராமமூர்த்தி மேல்நிலைப்பள்ளியில் மோதின.
அதில், கோவை சி.ஆர்.ஆர்., பள்ளி வெற்றி பெற்றது.ஆண்களுக்கான கோகோ இறுதிப் போட்டியில், கோவை சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளியும், ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளியும் விளையாடியது. போட்டியில், கோவை சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது.
வாலிபால் போட்டியில், திருச்சி எஸ்.எம்., மேல்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியும் விளையாடியதில், திருச்சி எஸ்.எம்., பள்ளி வெற்றி பெற்றது.கோவை சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி மாணவி ஹேமலதா, மாணவர் அருண்குமார், கரூர் மாவட்டம், வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வாணி, திருச்சி எஸ்.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் விளையாட்டுப்பள்ளி மாணவர் கோபிகிருஷ்ணன் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், பாவை வித்யாஸ்ரம் பள்ளி முதல்வர் ஜமுனாரமணி வரவேற்றார். பாவை பள்ளிகள் இயக்குனர் சதீஸ் வாழ்த்திப் பேசினார். கல்வி நிறுவன சேர்மன் ஆடிட்டர் நடராஜன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.