Pages

Monday, November 26, 2012

உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர் சங்கம் பாராட்டு

உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை, ஒளிவு, மறைவின்றி நடத்தி, அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் பணி நியமனம் வழங்க  உத்தரவிட்ட முதல்வருக்கு, உடற்கல்வி ஆசிரியர், சங்கம், நன்றி தெரிவித்துள்ளது.
சங்க பொதுசெயலர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: 1,089 உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் அனைத்தையும், ஒளிவு, மறைவின்றி வெளியிட்டு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு செல்வம் தெரிவித்துள்ளார்.தலைமை நிலைய செயலர் சீனிவாசன் கூறியதாவது:சென்னை நகரின் பல்வேறு பள்ளிகளில், காலியிடங்கள் இருந்தன. இந்த இடங்கள் அனைத்தையும், இணையதளத்தில் வெளியிட்டு, நிரப்பியதால், ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்," காலி பணியிடங்கள் அனைத்தையும், அப்படியே இணையதளத்தில் வெளியிட்டு, நிரப்பி உள்ளோம்&' என, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.