Pages

Thursday, November 22, 2012

அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.
இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து
 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும்.
 அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.