Pages

Thursday, November 22, 2012

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. 6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை
நியமனம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

இடைநிலை, பட்டதாரி, கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை லூர்துநாதன் சிலை முன்பு இன்று (22ம் தேதி) மாலை 5 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பாளை மார்கெட் திடலில் முடிவடைகிறது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்கிறார்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி பார்வையாளராக பங்கேற்கிறார். இதில் தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில தலைவர் பாண்டியன், மாநில துணை செயலாளர் தாயப்பன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜான் துரைசாமி, முத்துராமன், மனோகரன், பிரபு கட்டாரி, சந்திரன், முத்தம்மாள், மெர்சி நிர்மலா சாமுவேல், மோதிலால் ராஜ், மருது, ராமர், கிறிஸ்டோபர், இனிகோ, பாபு உட்பட பலர் பேசுகின்றனர்.மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறுகிறார்.

1 comment:

  1. amam da neenga ukandha idathula irundhutu seat a theaikanum padikaravanga elam ilavu kaatha kili madhiri emaranum.. nalla iruku nyayam. seniority seniority nu uyira vidarengale???? thagudhi thervu ezudha vendiadhydane neengalum?? experience iruku illa?? pass panirukalam ila?? 6-10 subject dane?? asingama illa? chee

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.