காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதில் தேர்வு வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - இயக்குநர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கரபெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுமார் 1500 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் 1023 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
ஆனால் இன்று வரை தேர்வு வாரியம் அப்பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பவில்லை. இதைக் கண்டித்து வரும் 10ம் தேதி தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - இயக்குநர் சங்கம் சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.