பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்டோபர் 10, தேதி நடக்கிறது.
தமிழகத்தில், முதுகலை ஆசிரியர்களை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், ஆன்லைனில் நடக்கிறது. கடந்த 2010- 11ம் கல்வியாண்டில், டி.ஆர்.பி., மூலம் நேரடியாக தேர்வாகி, இதில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.சிவகங்கை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும், இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, அக்டோபர் 10ம் தேதி காலை, காலி பணியிடம் பற்றிய விவரம், இன சுழற்சி முறையில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும்.
விரும்பிய இடங்களை தேர்வு செய்து, நியமன உத்தரவை ஆசிரியர்கள் பெற்றுச் கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.
seekarama PG 2011 2012 LIST A YUM PODUNGA PA
ReplyDelete