Pages

Tuesday, October 9, 2012

பத்தாம் வகுப்பு தனி தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்&' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், அக்டோபர் 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, அக்டோபர் 15ம் தேதி துவங்கி, 29ம் தேடி வரை நடக்கிறது.

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, வரும் 11ம் தேத் முதல் 13ம் தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில், ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை அணுகலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.