மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் இதுவரை இந்தப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பாடத்திட்டங்களை உருவாக்குதல், புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) இயக்குநராக இளங்கோவன் ஏற்கெனவே 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
very use ful to our family members.thank u sir
ReplyDelete