Pages

Friday, October 5, 2012

தமிழக அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி அறிவித்து மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவு.

TO DOWNLOAD TN GOVT PRESS RELEASE NO.358 DATED. 05.10.2012 CLICK HERE...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 7% உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 1.7.2012 முதல் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்றும், ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைவார்கள். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் பெறும், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு, ரூ.1,443 கோடியே 52 லட்சம் கூடுதல் செலவு ஆகும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 

முதல்வரின் அறிவிப்பால் ஜூலை 2012 முதல் அரசு ஊழியர்களுக்கான மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி  65 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக உயர்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.