Pages

Saturday, October 20, 2012

தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்: 224 பேர் நியமனம்

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 15ம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்&' வழியாக நடந்தது. இதில், 143 பேர், பதவி உயர்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் வழியாக நடந்தது.

மொத்தம், 446 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேற்று, 250 பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, ஆன்-லைனில், ஒவ்வொருவராக, விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.இதில், 224 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. 26 பேர், பதவி உயர்வை, மறுத்தனர்.

பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், கலந்தாய்வு பணிகளை கவனித்தனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.