Pages

Tuesday, October 16, 2012

10 நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஜூலையில் நடந்த தேர்வை விட, இப்போது நடந்த தேர்வு, எளிதாக இருந்ததாலும், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக அதிகரித்து வழங்கியதாலும், அதிகம் பேர் தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

இதற்கிடையே, கேள்விகளுக்கான விடைகளை (கீ-ஆன்சர்), 10 நாளில் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தற்போது, மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள் கட்டுகள், சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

விடைத்தாள், ஸ்கேன் செய்வதற்கு முன்பே, விடைகளை வெளியிட்டால், ஏதாவது முறைகேடு நடப்பதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும் என்பதால், ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்தபின், விடைகளை வெளியிட, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.