பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிக் குக் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் பென்னிக் குக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக தனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.
இதன்படி, பென்னிக் குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக் குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.