Pages

Sunday, September 30, 2012

தட்கல் முறையில் நுழைவுச்சீட்டு பெறுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி

பிளஸ் 2 தனித் தேர்வுக்கு, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
பிளஸ் 2 தனித்தேர்வுகள் அக்.,4ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் நுழைவுச்சீட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்த மாணவர்களுக்கும் நேற்று நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதனால் ஒரே கவுன்டரில் மட்டும் நுழைவுச்சீட்டு விநியோகம் நடைபெற்றதால் ஏராளமான மாணவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கு தேர்வுத்துறை எந்த ஏற்பாடும் செய்யாததால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மாணவர்களுக்கு தொடர்ந்து இன்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.