Pages

Sunday, September 30, 2012

4 ஆண்டுகளாகியும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ! சம்பள வேறுபாட்டையும் களைய கோரிக்கை.

 மதுரையில்  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின்  மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 2009ல், இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பின் அடிப்படையில் நியமித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, வேறு மாவட்டத்திற்கு செல்லக்கூடாது, என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது. தற்போது, இதை நீக்க அரசு முயற்சிக்க வேண்டும் என 7 ஆயிரம் பேர், அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பும் இடத்திற்கு பணிமாறுதல் பெறும்போது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் பலர் உள்ளனர். இருந்தும் நான்கு ஆண்டுகளாக அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

அடுத்த பிரச்னையாக, சம்பள விகிதத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்தாவது ஊதியக்குழுவில் "பி' பிரிவில் இருந்த எங்களுக்கு, 6வது ஊதியக்குழுவில் "டி' பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் எங்களைவிட ஒருநாள் முன்னதாக பணிநியமனம் செய்யப்பட்டவர், ரூ.11 ஆயிரம் அதிகமாக சம்பளம் பெறுகிறார். பெற்றோரை கவனிக்க இயலாது, தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றும் எங்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். சம்பள வேறுபாட்டையும் களைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.