Pages

Thursday, July 19, 2012

ஆகஸ்ட் முதல் வாரத்தில் டி.இ.டி. ரிசல்ட்!

தமிழக அரசால் கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட, முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும், 1,027 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை, "ஸ்கேன்&' செய்யும் பணி, சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தினசரி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் விடைத்தாள்கள், "ஸ்கேன்&' செய்யப்படுகின்றன. இந்தப் பணி, வரும் 25ம் தேதி வரை நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் மேலும் கூறியதாவது:விடைத்தாள், "ஸ்கேன்&' செய்யும் பணி முடிந்ததும், இணையதளத்தில், உத்தேச விடைகள் வெளியிடப்படும். அதில் ஆட்சேபணை இருந்தால், ஒரு வாரத்தில் தேர்வர் தெரிவிக்க, வாய்ப்பு அளிக்கப்படும். அந்த ஆட்சேபணைகள் குறித்த ஆய்வு, பாட நிபுணர்களைக் கொண்டு மூன்று நாள் நடக்கும்.
இதன்பின், அனைத்து விடைத்தாளுக்கும் உரிய மதிப்பீடு பணிகளைச் செய்து, அதற்குரிய மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண் அளிக்கப்படும்.
தேர்வு முடிவு மற்றும் இறுதி விடைகள், ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.ஆகஸ்ட் முதல் வாரத்தில், முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.