Pages

Sunday, June 17, 2012

விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி

பிளஸ் 2 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யவும் மறுகூட்டலுக்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்வுத்துரை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கால தமாதத்தை தவிர்க்க அரசு தேர்வு இயக்குனரகம் இந்தாண்டு முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் நகல் கிடைக்கப்பெற்று ஐந்து நாட்களுக்குள் கோர் பேங்கிங் சர்வீஸ் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் கட்டணத்தை செலுத்தலாம்.
ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் முழு பெயர், விலாசம், தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் ஆகியவை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும. விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எண்ணில் தொடர் கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுரைப் படிவத்தை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.