Pages

Sunday, June 17, 2012

தமிழகத்தில் முப்பருவ புத்தகமா அல்லது செயல்வழிக் கற்றல் அட்டையா?

பள்ளிகள் திறந்து 15 நாள்கள் ஆகியும் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் முப்பருவப் புத்தகமா, செயல்வழிக் கற்றல் அட்டையா, எந்த வழியில் பாடம் நடத்துவது என்று குழப்பத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் ஏ.பி.எல். எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.
இம்முறையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் இருந்தாலும் கற்றல் அட்டை வாயிலான படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இம்முறையில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு கற்றல் அட்டைகளைப் படிப்பதன் மூலம் படிநிலை அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் விதமாக அரசு முப்பருவ முறையில் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முப்பருவ முறை பாடப் புத்தகங்களின் அடிப்படையில் பாடம் நடத்தத் தொடங்கி விட்டனர்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் ஏ.பி.எல். முறைப்படி மாணவர்களைப் பிரித்து கற்றல் அட்டைகளை வைத்து பாடம் நடத்துவதா, வகுப்பு வாரியாகப் பிரித்து முப்பருவ முறை புத்தகங்களை வைத்து பாடம் நடத்துவதா எனக் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, இன்னும் 15 நாட்களில் கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். கற்பித்தலைப் பொறுத்தவரை செயல்வழிக் கற்றல் முறையே தொடரும் என்றனர்.

1 comment:

  1. CCE - is one type of evaluation system by which we can effectively find out pupils leaning skills in various dimensions. But what about the teaching methodology?

    What i the use (need) of enriched methodology of evaluation with out enriched teaching system???

    if you want to uplift the educational standard please concentrate enrich teaching methods before going to evaluate...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.