Pages

Sunday, June 10, 2012

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு தத்கால் திட்டத்தின் கீழ், நாளை(11ம் தேதி) முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவ, மாணவியர், உடனடித் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
முதன்மை கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். தபால் மற்றும் கூரியரில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் மாணவரின் புகைப்படத்தில், ஏற்கனவே பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். 'தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.