Pages

Friday, June 22, 2012

டி.ஆர்.பி தேர்வு: ஜூலை 12 பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப்படும் நாளில், பள்ளி செயல்படுவதால் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக ஜூலை 12ம் தேதிக்கு இத்தேர்வு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இத்தேர்வை தமிழகம் முழுதும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 1400 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக இருப்பதால் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.