Pages

Sunday, May 27, 2012

திருவண்ணாமலையில் டி.ஆர்.பி. தேர்வு மையங்கள் மாற்றம்.

திருவண்ணாமலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன.  இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான் வெளியிட்டுள்ள செய்தி: ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடிப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் சில மையங்களில் தேர்வு நடத்த இடர்பாடு உள்ளது. எனவே, ஏற்கெனவே தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் என்று குறிப்பிட்ட நுழைவச் சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டில் உள்ள காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி என்று குறிப்பிடப்பட்ட நுழைவுச்சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள சாரோன், ஏ.எல்.சி.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.