வேலூர், ஜோலார்பேட்டையில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ. மதிமாறன் கூறியது:
சர்வதேசத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போட்டிகளில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் வேலூர், ஜோலார்பேட்டையில் நடைபெறுகிறது.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய முகாமில் வேலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 95 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு இம்மாதம் 7-ம் தேதிவரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான முகாம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி இம்மாதம் 8-ம் தேதிவரை நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் விளையாட்டின் இப்போதைய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாகப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கு இம்மாதம் 10-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை 15 நாள்கள் மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாம் நடைபெறும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.