பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு
துணைத் தேர்வுக்கு புதன்கிழமை (மே 23) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களும் சிறப்பு துணைத்
தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.85-ம் கூடுதலாக எழுதும்
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 சேர்த்துக் கட்ட வேண்டும்.
பள்ளி மாணவர்கள், இந்த மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வுக்கு "நஏ' என்று
குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே மே 23 முதல் மே 28
வரைபெறலாம். மே 28-க்குள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தைப் பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்களாக எழுதும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,
மாவட்டக் கல்வி அலுவலர்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.