எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம், விடுமுறை
நாட்களிலும் வழங்கப்பட இருப்பதால், வேலை நாட்களில், காலை முதல் காத்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி
முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடும்பத்துடன் வருகை:
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதி வரை
வழங்கப்பட உள்ளன. முதல் நாளான, மே 15ம் தேதி மட்டுமே, தமிழகம் முழுவதும்,
11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
மருத்துவப் படிப்பில் ஆர்வமுள்ள மாணவ,
மாணவியர், முதல் நாளே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்ற ஆசையில், காலை 6
மணி முதலே காத்துக் கிடந்ததால், வரிசை நீண்டு கொண்டே போனது. மருத்துவப்
படிப்பு விண்ணப்பம் வாங்க வருபவர்களில் பலர், குடும்பத்துடன் வருவதை,
வழக்கமாக கொண்டுள்ளனர்.
விடுமுறை நாட்களிலும்...:
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன்
கூறியதாவது: காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை, விண்ணப்பம்
வழங்கப்படுகிறது.
இதுதவிர, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும்,
விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பம்
வழங்கப்படுவதால், நீண்ட நேரம் வரிசையில் நின்று அவதிப்பட வேண்டியதில்லை.
மேலும், ஒரு விண்ணப்ப படிவம் வாங்க,
குடும்பத்துடன் சிலர் வருவதால், அதிக கூட்டம் இருப்பதைப் போல தோற்றம்
அளிக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார். சென்னையில், விண்ணப்ப விற்பனை
துவங்கிய இரண்டாம் நாளான நேற்று(மே 16ம் தேதி), அரசு பல் மருத்துவக்
கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில்,
வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாக
தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.