Pages

Thursday, May 17, 2012

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை 2 மடங்கு அதிகரிக்க திட்டம்!

நாட்டில் நிலவும் மருத்துவர்:நோயாளி விகிதாச்சாரத்தை குறைக்க, மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வரும் 2021ம் ஆண்டில், MBBS இடங்களை 80,000 என்ற அளவிலும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை 45,000 என்ற அளவிலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 1:2000 என்ற அளவில் உள்ள மருத்துவர் நோயாளி விகிதாச்சாரத்தை, 1:1000 என்ற அளவில் மாற்றியமைக்க முடியும்.

MBBS படிப்பில் 38,431 இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 22,806 இடங்களையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான நாடாளுமன்ற கன்சல்டேடிவ் கமிட்டி கூட்டத்தில், இத்தகவலை, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில், நாடெங்கிலுமுள்ள 335 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 41,569 MBBS இடங்களும், 22,194 முதுநிலை மருத்துவ இடங்களும் உள்ளன. இத்தகைய இடங்களில் அதிகமானவை, தென் மற்றும் மேற்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே செல்கின்றன.
ஏனெனில், 335 மருத்துவக் கல்லூரிகளில் 66% கல்லூரிகளும், தற்போதைய MBBS இடங்களில் 69% இடங்களும், தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், கோவா, மராட்டியம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலேயே உள்ளன. அதேசமயம், மத்திய மற்றும் கிழக்கிந்திய மாநிலங்கள் மிக குறைந்தளவு கல்லூரிகளையும், மருத்துவ இடங்களையுமே கொண்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.