இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திறந்தநிலை பல்கலைகளிலும், ஒரே பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டுவர, இக்னோ முயற்சித்து வருகிறது.
உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் அதே நேரத்தில், தரமான கல்வியைப் பெற MHRD உருவாக்கியுள்ள தேசிய செயல்திட்டத்தை வலுவாக்கவும், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று இக்னோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்னோவின், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டமைப்பு(IUC), சமீபத்தில், அனைத்து திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில், திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்விக்கென்று, ஒரு பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதன் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 3 வகையான வியூகங்களை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இளநிலைப் படிப்பிற்கான பொது பாடத்திட்டத்தை உருவாக்குவது, அனைத்து வலைதளங்களிலும் கிடைக்கும் வகையில் திறந்தநிலை கல்வி வளத்தை உருவாக்குதல் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான multi media - e- content -ஐ உருவாக்குவது ஆகியவை அந்த 3 வியூகங்கள் ஆகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.