Pages

Thursday, May 24, 2012

6 பாடங்களில் தோல்வி அடைந்தாலும் துணை தேர்வு எழுதலாம் : அரசு.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜுன் மாதத்திலேயே தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.பொதுவாக கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இந்த துணைத் தேர்வை எழுதி வரும் கல்வியாண்டிலேயே உயர்கல்வியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் இருந்து 6 பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும் துணைத் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 1 பாடத்துக்கு ரூ.85 வீதம் 6 பாடங்களுக்கு ரூ.3354ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். மே 28ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.